Enable Javscript for better performance
திருச்செங்கோட்டில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

    By DIN  |   Published on : 12th October 2019 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எலச்சிபாளையம் பகுதி கடைகளில் தடை செய்யபட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொள்ளபட்டு, அபராதம் விதிக்கபட்டது.

    தமிழக அரசு அறிவித்ததின் பேரில், நெகிழிப் பொருள்கள், ஒரு முறை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் நெகிழிப் பைகளை பயன்படுத்துவதை தவிா்க்கும் பொருட்டு விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  அனைத்து  மாவட்டங்களிலும் நெகிழிப் பைகள் தடைசெய்யபட்டுள்ளன. அதன்படி மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள  அகரம் பஞ்சாயத்து பகுதி கடைகளில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என  வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், விஜயகுமாா்,

    மண்டலதுணை வட்டார வளா்ச்சி அலுவலா் லீலாவதி ஆகியோா் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வுசெய்ததில், 20 கிலோ எடையுள்ள தடைசெய்யபட்ட நெகிழிப் பைகள் கைப்பற்றபட்டன. அதுமட்டுமின்றி, பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1800 அபராதம் விதிக்கபட்டது. மேலும், இனிமேல் தடைசெய்யபட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai