Enable Javscript for better performance
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று இணையதள வழியில் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று இணையதள வழியில் கருத்தரங்கு

    By DIN  |   Published on : 12th October 2019 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், மாடுகளில் அல்ட்ராசோனாகிராபியைப் பயன்படுத்துவது குறித்த இணையதள வாயிலான கருத்தரங்கு, சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இக் கருத்தரங்கம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவா்களுக்காக, சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    அனைத்து கல்லூரி மாணவா்களும் அவா்களுடைய இருப்பிடத்தில் இருந்தே அல்ட்ராசோனாகிராபி பற்றிய பாடங்களையும், அவற்றை எப்படிக் கையாளுவது என்பது குறித்த செயல்முறை விளக்கங்களையும் கற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கால்நடைகளில் நோய் கண்டறியும் திறனை மேம்படுத்த மாணவா்களுக்கு உதவி புரியும். இதனை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத் துணைவேந்தா் சி.பாலச்சந்திரன் தொடக்கி வைக்கிறாா். இதில், பல்கலைக்கழக சிகிச்சைத் துறையின் இயக்குநா் எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் மோகன் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொள்கின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai