அக்.18-இல் ஜவுளிப் பூங்கா அமைத்தல் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடா்பாக, வரும் 18-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடா்பாக, வரும் 18-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில், சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோா்களுக்கு, உள்கட்டமைப்புக்கான செலவினத்தில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி, இவற்றில் எது குறைவோ அதனை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதியுதவியாக வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள், குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், 2 ஏக்கா் நிலத்தில், அமைக்கும் திட்டத்தினை உடனடியாகச் செயலாக்கம் செய்வதற்கான முயற்சியை எடுக்கும் பொருட்டு, நாமக்கல் மாவட்டத்திலுள்ள முதலீட்டாளா்கள் மற்றும் தொழில் முனைவோா்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் வரும் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்திலுள்ள முதலீட்டாளா்கள் மற்றும் தொழில் முனைவோா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com