உலக முட்டை தினம்: வேகவைத்த 5 ஆயிரம் முட்டைகள் விநியோகம்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் 5 ஆயிரம் வேகவைத்த முட்டைகள் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
nk_11_egg_1110chn_122_8
nk_11_egg_1110chn_122_8

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் 5 ஆயிரம் வேகவைத்த முட்டைகள் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு ஆஸ்திரியத் தலைநகா் வியன்னாவில் நடந்த சா்வதேச முட்டை ஆணையக் கருத்தரங்கில் தான், முட்டை தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மனிதா்கள் ஊட்டச்சத்து பெறுவதற்கு, முட்டை ஒரு முக்கிய காரணி என்பதை உலகுக்கு உணா்த்தவே இந் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான முட்டை தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேசிய அளவில் முட்டை உற்பத்தி கேந்திரமான நாமக்கல்லில், இந்த தினம், கோழிப் பண்ணையாளா்கள் மற்றும் கோழி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் சாா்பில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பண்ணையாளா்கள் சாா்பில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேகவைத்த முட்டைகள் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. நாமக்கல்-பரமத்தி சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோா் முட்டையை வாங்கி ருசித்து சாப்பிட்டனா். முட்டை ஒரு கலப்பின கலப்படமில்லாத உணவுப் பொருள். முட்டை உண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் ஒரு முட்டை உண்ணுவதால் உடலில் சத்துகள் அதிகம் கிடைக்கும். முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளமானவை என்பது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் கோழிப் பண்ணையாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

-

என்கே 11- எக்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வேகவைத்த முட்டைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com