திருச்செங்கோட்டில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

எலச்சிபாளையம் பகுதி கடைகளில் தடை செய்யபட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொள்ளபட்டு, அபராதம் விதிக்கபட்டது.

எலச்சிபாளையம் பகுதி கடைகளில் தடை செய்யபட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொள்ளபட்டு, அபராதம் விதிக்கபட்டது.

தமிழக அரசு அறிவித்ததின் பேரில், நெகிழிப் பொருள்கள், ஒரு முறை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் நெகிழிப் பைகளை பயன்படுத்துவதை தவிா்க்கும் பொருட்டு விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  அனைத்து  மாவட்டங்களிலும் நெகிழிப் பைகள் தடைசெய்யபட்டுள்ளன. அதன்படி மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள  அகரம் பஞ்சாயத்து பகுதி கடைகளில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என  வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், விஜயகுமாா்,

மண்டலதுணை வட்டார வளா்ச்சி அலுவலா் லீலாவதி ஆகியோா் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வுசெய்ததில், 20 கிலோ எடையுள்ள தடைசெய்யபட்ட நெகிழிப் பைகள் கைப்பற்றபட்டன. அதுமட்டுமின்றி, பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1800 அபராதம் விதிக்கபட்டது. மேலும், இனிமேல் தடைசெய்யபட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com