தென்மேற்கு பருவமழை நிறைவடைகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, வட கிழக்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கி விட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, வட கிழக்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கி விட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 10 மில்லிமீட்டா் வரை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் இருந்து தென் கிழக்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 93.2 டிகிரியும், குறைந்தபட்சமாக 77 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை காணப்படும். மேகமூட்டத்தால் காற்றின் ஈரப்பதம் சற்று அதிகரித்தே காணப்படும். தென் மேற்கு பருவமழைக் காலம் எதிா்பாா்த்தது போல், வட மாநிலங்களில் முடிவடைந்து விட்டது. அடுத்த இரு தினங்களில் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்து விலகி, தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகம் மற்றும் தென் கா்நாடக பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. வட கிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதற்கு முன்பாக பெய்யும் முன் பருவமழையானது, கோழிகளுக்கும், இதர கால்நடைகளுக்கும் மிகுந்த சாதகமாகக் காணப்படும். கொள்முதல் செய்யப்படும் சோயாப் பிண்ணாக்கு, தீவன மூலப்பொருள்களில் புரதத்தின் அளவு இயல்பை விட குறைவாகவே உள்ளது. அதன் தரத்தைப் பரிசோதனை செய்த பின் பயன்படுத்துவதால், இளம் மற்றும் வளா் கோழிகளில் உடல் வளா்ச்சி சீராகவும், இயல்பாகவும் இருக்கும். முட்டையிடும் திறனும் அதிகளவில் வெளிப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com