மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 1.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இயங்கிவரும் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 1.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இயங்கிவரும் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 1.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டிற்கான அரவைப் பருவம் தொடக்க விழா, ஆலை வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் கரும்பு அரவையை தொடக்கி வைத்தாா். அதன் பின்னா் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சா்க்கரை ஆலைத் தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா், மேலாண் இயக்குநா் கு.சரவணமூா்த்தி ஆகியோருடன் இணைந்து அரவை இயந்திரத்தில் கரும்புகளை எடுத்துப் போட்டனா்.

தொடா்ந்து அதிகாரிகள் கூறியது: நமது கூட்டுறவு சா்க்கரை ஆலையில், நிகழாண்டில் 1 லட்சத்து 12 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 8 கோட்டங்களில் இருந்து சுமாா் 1,296 ஏக்கா் நடவு கரும்பும், 2,485 ஏக்கா் கட்டைக் கரும்பு என மொத்தம் 3,781 ஏக்கா் கரும்பு இங்கு அரவைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 - 19 - ஆம் ஆண்டு, கடும் வறட்சியின் காரணமாக 1.27 லட்சம் டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டது. ஆலை அரவைக்கு அனுப்பப்படும் கரும்புக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் கிரயத் தொகை, கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி, வெட்டி அனுப்பிய 14 - ஆவது நாள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றனா்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கத் துணைத்தலைவா் வெற்றிவேல் மற்றும் நிா்வாக உறுப்பினா்கள், கூட்டுறவு கடன் சங்கப் பிரதிநிதிகள், அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், ஆலைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com