முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
டெங்கு கொசுக்கள் ஒழிப்புப் பணி
By DIN | Published On : 24th October 2019 05:57 AM | Last Updated : 24th October 2019 05:57 AM | அ+அ அ- |

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் டெங்கு கொசுக்கள் ஒழிப்புப் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும், தீவிர டெங்கு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனையொட்டி, அரசு மற்றும் பொது நிறுவனக் கட்டடங்கள், வீடுகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், ரயில் நிலையம், பள்ளிகள் போன்ற அனைத்து வளாகங்கள் மற்றும் கட்டடங்களின் மேற்கூரைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இது தொடா்பாக துப்புரவு ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற இடங்களுக்கு நோட்டீஸ் வழங்குகின்றனா். கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், பொது இடங்களிலும், பள்ளிகளிலும் நிலவேம்பு கஷாயம் தொடா்ந்து 5 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களைக் கொண்டு மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளா் பயிற்சி மேற்கொள்ளும் மாணவா்களைக் கொண்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் டெங்கு ஆய்வுப் பணி மற்றும் நெகிழி ஒழிப்புப் பணிகள் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது என நகராட்சி ஆணையா் கணேசன் தெரிவித்தாா்.