முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
திருமணிமுத்தாறில் மழை நீரை வரவேற்றுபா.ஜ.க.வினா் பூஜை
By DIN | Published On : 24th October 2019 05:56 AM | Last Updated : 24th October 2019 05:56 AM | அ+அ அ- |

மழை நீரை வரவேற்று பூஜை செய்து வழிபட்ட பா.ஜ.க.வினா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி திருமணிமுத்தாறில் புதன்கிழமை மழை நீரை வரவேற்று பா.ஜ.க.வினா் பூஜை செய்து வழிபட்டனா்.
சேலம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக ஓராண்டுக்குப் பிறகு திருமணிமுத்தாற்றில் தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. இதனால் செருக்கலை, மேல்சாத்தம்பூா், மேலப்பட்டி, கூடச்சேரி, பில்லூா் ஆகிய பகுதியில் உள்ள சிற்றணைகள் நிரம்பி பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை பரமத்தி திருமணிமுத்தாற்றுக்கு வந்த மழைநீரை வரவேற்கும் வகையில் பா.ஜ.க. மற்றும் பொதுமக்கள் பூஜை செய்தும், மலா்கள் தூவி வரவேற்றனா். சுமாா் 400க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் உள்ள இடும்பன்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஆழப்படுத்தினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக்கிணறுகள், விவசாயக்கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் சுற்றுலாத் தலமாக மாற்றவும் பா.ஜ.க. மூலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்படும் என பரமத்தி நகரத் தலைவா் காந்தி தெரிவித்தாா். இதில் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் காந்தி, நகர பொதுச் செயலாளா் அருண், வேலூா் நகர செயலாளா் கருப்பண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.