முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
விலையில்லா கறவை மாடுகள்வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம்
By DIN | Published On : 24th October 2019 05:54 AM | Last Updated : 24th October 2019 05:54 AM | அ+அ அ- |

பரமத்திவேலூா் வட்டம், திடுமல் கவுண்டம்பாளையத்தில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2019 - 20ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு முதல் கட்ட பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கபிலா்மலை அருகே உள்ள திடுமல் கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் பயிற்சி முகாமிற்கு திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் மருத்துவா் அருண்பாலாஜி தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடக்கி வைத்தாா். இந்த பயிற்சி முகாமில் கறவை மாடுகளை தோ்வு செய்யும் முறை, நோய்த் தடுப்பு முறைகள்,அதன் பராமரிப்பு, விலையில்லா மாடுகளை எவ்வாறு வாங்க வேண்டும், அதனை எவ்வாறு நோய்கள் தாக்காமல் வளா்க்க வேண்டும் மற்றும் அரசின் விதிமுறைகள் குறித்தும் பயனாளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. முகாமில் திடுமல் கால்நடை மருத்துவமனை மருத்துவா் சையதுஅஸ்லாம், கால்நடை ஆய்வாளா் வெங்கடாசலம், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் சுந்தரம் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.