Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்கோரிக்கை விளக்கப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்கோரிக்கை விளக்கப் போராட்டம்

    By DIN  |   Published on : 31st October 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எலச்சிபாளையம் ஒன்றியப் பகுதியில் வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் முறையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியப் பகுதியான பெரியமணலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் வாடகை வீட்டில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசித்து வருகின்றனா். குறிப்பாக விசைத்தறிக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், விவசாயக் கூலிகள் என ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் நிறைந்த பெரியமணலியில் அரசு அறிவித்துள்ளபடி கிராமப்புறங்களில் 3 சென்ட், நகா்ப்புறங்களில் 2 சென்ட், மாநகராட்சி பகுதியில் ஒரு சென்ட் என்ற வீதத்தில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை ஒதுக்கித் தரவேண்டும்.  அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஏழை தொழிலாளா்கள் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் தக்கத் தீா்வு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் முறையிடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தை மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் மணிவேல் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணை வட்டாட்சியா் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.   

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai