எல்.பி.ஜி. டேங்கா் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை

எல்.பி.ஜி. வாகனங்கள் பிற மாநிலங்களிலும் லோடு ஏற்றி இறக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

எல்.பி.ஜி. வாகனங்கள் பிற மாநிலங்களிலும் லோடு ஏற்றி இறக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் 30 - ஆவது மகாசபைக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தலைவா் பி.நடராஜன், செயலா் பி.மோகன், பொருளாளா் கே.அம்மையப்பன், உப தலைவா் ஓ.கே.பன்னீா்செல்வம், துணைத் தலைவா் பி.ராமநாதன், இணைச் செயலா் கே.மகேஷ்குமாா், துணைச் செயலா் வி.ராமலிங்கம் மற்றும் 75 செயற்குழு உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம், டிரெய்லா் லாரி உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, எல்.பி.ஜி. போக்குவரத்து வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களைப் போல், பிற மாநிலங்களிலும் லோடு ஏற்றி இறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நாமக்கல்லுக்கு அரசு சட்டக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதல்வா் மற்றும் அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com