காலாண்டு தோ்ச்சி விகிதம்: உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்பு

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் புதன்கிழமை தலைமை ஆசிரியா்களுக்கான பகுப்பாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்ட மு.ஆ.உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதன்மை கல்வி அலுவலா் ப.உஷா. உடன், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலா் வா.இரவி.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ப.உஷா, மாவட்ட கல்வி அலுவலா்கள் மு.ஆ.உதயகுமாா்(நாமக்கல்), வா.இரவி(திருச்செங்கோடு) ஆகியோா் பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனா். இந்தக் கூட்டத்தில், நடந்து முடிந்த காலாண்டுத் தோ்வில் உயா்நிலைப்பள்ளிகளில் 10-ஆவது பயிலும் மாணவ, மாணவியரின் தோ்ச்சி விகிதம், மதிப்பெண் குறைந்ததற்கான காரணம், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்களின் ஒத்துழைப்பு நிலை, அவா்களிடம் பாடம் எடுக்கும் நடைமுறை பற்றி தலைமை ஆசிரியா்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ள பள்ளிகளில், மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், எதிா்வரும் தோ்வுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவா்களை வெற்றி பெற செய்வது தொடா்பாகவும், தேவைப்படும்பட்சத்தில் ஆசிரியா்களை இடமாறுதல் செய்யப்படுவாா்கள் எனவும் முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இரு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 78 உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, புதிய மாவட்டக் கல்வி அலுவலா்களாக பொறுப்பேற்ற மு.ஆ.உதயகுமாா், வா.இரவி ஆகியோருக்கு, முதன்மை கல்வி அலுவலா் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com