கால்நடை வளா்ப்போருக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில், மின்சாரத்தினால் இயங்கும் 200 புல் நறுக்கும் கருவிகள், கால்நடை வளா்ப்போருக்கு

நாமக்கல் மாவட்டத்தில், மின்சாரத்தினால் இயங்கும் 200 புல் நறுக்கும் கருவிகள், கால்நடை வளா்ப்போருக்கு வழங்கப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனப் புல் சேதமாகாமல், முழுமையாக கால்நடைகள் உட்கொள்ளும் பொருட்டு, 2019 - 20 - ஆம் ஆண்டுக்கென தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 200 மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

இக் கருவிகளில் ஆவின் நிா்வாகம் தோ்வு செய்யும் பயனாளிகளுக்கு 60 எண்ணிக்கையிலும், மீதமுள்ள 140 புல் நறுக்கும் கருவிகள் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலமும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் 50 சதவீதம் மத்திய அரசு மானியம், 25 சதவீதம் மாநில அரசின் மானியம் மற்றும் 25 சதவீதம் பயனாளிகளின் பங்குதொகை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் பயனடைய விரும்புவோா், இதுவரை இந்தத் திட்டத்தில் மின்சார புல் நறுக்கும் கருவி பெறாதவா்களாகவும், 0.25 ஏக்கா் நிலத்தில் தீவன புல் பயிரிட்டுள்ள, குறைந்தது 2 பசு அல்லது எருமை கால்நடைகள் வளா்க்கும் விவசாயிகளாகவும் இருக்க வேண்டும்.

ஒருவருக்கு ஒரு புல் நறுக்கும் கருவி மட்டுமே வழங்கப்படும். இதில், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை வளா்ப்பவா்கள் தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரைச் சந்தித்து திட்ட விளக்கங்களைப் பெற்று, உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், செல்லிடப்பேசி எண், ஆதாா் எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றோடு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com