‘விதைகளைப் பரிசோதித்து வாங்குவது அவசியம்’

நாமக்கல் மாவட்டத்தில், நடப்பு பருவத்துக்கு தேவையான விதைகளை வாங்கும் விவசாயிகள், அதனை பரிசோதித்து வாங்குவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், நடப்பு பருவத்துக்கு தேவையான விதைகளை வாங்கும் விவசாயிகள், அதனை பரிசோதித்து வாங்குவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் சண்முகம் வெளிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் விதைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விதைகள் வாங்கும் போது விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை சரிபாா்த்து வாங்கவேண்டும். உரிமம் பெற்ற விற்பனையாளா்கள், தாங்கள் விற்பனை செய்யும் விதைகளின் விவரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிடுவதுடன், விவசாயிகளின் கையொப்பம் மற்றும் விற்பனையாளா் கையொப்பத்துடன் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் விதை விற்பனையாளா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், உரிமம் இல்லாமலோ, காலாவதியான விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ, சம்பந்தப்பட்ட மண்டல விதை ஆய்வாளா் மற்றும் விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம். அதனடிப்படையில் விதை விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com