புதுச்சத்திரத்தில் செப்.4இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சத்திரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  புதன்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.

புதுச்சத்திரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  புதன்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.
இது குறித்து  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம்  8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையற்ற, 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட,  ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் புதன்கிழமை புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
இந்த முகாமில், புதுச்சத்திரம் வட்டாரத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையில்  பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமிற்கு தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை,  கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கூடுதல் கட்டடம், நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியில், தங்களது நிறுவனத்தின் பெயரை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி  04286 - 281131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com