பாண்டமங்கலத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்
By DIN | Published On : 02nd September 2019 04:25 AM | Last Updated : 02nd September 2019 04:25 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பேரூராட்சியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி முகாமுக்குத் தலைமை வகித்து, பாண்டமங்கலம் பேரூராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்திருந்தனர். இம் மனுக்கள் மீது 30 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பேரூராட்சிப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.