சுடச்சுட

    

    கூட்டுறவு அச்சக சங்க நிர்வாகக் குழு தேர்தல்: 20 பேர் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 12th September 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத்துக்கான நிர்வாகக் குழு தேர்தலையொட்டி, திங்கள்கிழமை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     தமிழகத்தில் நகர, ஒன்றிய, மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட அளவிலான சங்கங்களுக்கு நான்காம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
     நாமக்கல்-மோகனூர் சாலையில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத்தில், 20 நிர்வாகக் குழு பதவிக்கான தேர்தலுக்குரிய மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மனுக்கள் மீதான பரிசீலனையும், 12-ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 16-ஆம் தேதி போட்டியுள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. நிர்வாகக் குழுவுக்கு தேர்வாகும் நபர்கள், 21-ஆம் தேதியன்று தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai