சுடச்சுட

  

  செப். 18-இல் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

  By DIN  |   Published on : 12th September 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈரோடு மண்டல அளவிலான மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
   இதுகுறித்து நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொ) அ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின், ஈரோடு மண்டலத்துக்குள்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் தற்போதைய பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வோர் காலாண்டிலும் ஈரோடு மண்டல அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
   அதன்படி, நிகழாண்டில் மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம் வரும் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு, ஈரோடு ஈ.வி.என். சாலையில் அமைந்துள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடைபெறுகிறது. இம்முகாமில், ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர்கள், பணியில் இருப்போர் தங்களது குறைகளை நேரடியாகவும், மனுக்களாகவும் தெரிவிக்கலாம். அக்கூட்டத்திலேயே உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai