சுடச்சுட

  

  வட்ட அளவிலான தடகளப் போட்டியில், பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
   தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் அண்மையில், வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
   இதில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவியர் பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவி சே.காவியா, 17 வயதுக்கு உள்பட்ட மாணவியர் பிரிவில் 9-ஆம் வகுப்பு மாணவி அ.ஜீவிதா மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவியர் பிரிவில் 12-ஆம் வகுப்பு மாணவி இரா.நிஷாந்தினி ஆகிய மூவரும் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
   மேலும், புள்ளிகள் பட்டியலில் 32 தங்கம், 15 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட 51 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து, பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவ, }மாணவியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர் -ஆசிரியர் கழகத்தினர் வாழ்த்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai