சுடச்சுட

  

  பெண் ஊழியர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட பொருளாளர் என்.அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   இந்தக் கூட்டத்தில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது பங்கேற்று சிறைச் சென்ற அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னைகளைக் களையும் பொருட்டு விசாகா கமிட்டியை அமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.இளவேந்தன், வி.சுப்பிரமணி, தங்கராஜ், நந்தினி மற்றும் இணைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai