சுடச்சுட

  

  குடிமராமத்து திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்:  அரசு முதன்மைச் செயலர் பங்கேற்பு

  By DIN  |   Published on : 13th September 2019 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா நேரடியாக ஆய்வு செய்தார்.
   நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலருமான தயானந்த் கட்டாரியா பங்கேற்றார். இதில், ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகள், நீர் செறிவூட்டும் பணிகள், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள், சிறப்பு தூர்வாரும் பணிகள், குடிமைப்பொருள்கள் வழங்கும் பணி உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பொ.பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   ஆய்வுக் கூட்டத்துக்கு முன்னதாக, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்குள்பட்ட நியாய விலைக்கடையைப் பார்வையிட்டு அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து சரிபார்த்தார். தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டம், விட்டாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலகத்தையும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஜேடர்பாளையம் கிளை அலுவலகத்தையும் பார்வையிட்டார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் கிராமத்தில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை பார்வையிட்டு ஆட்சியரிடம் கேட்டறிந்தார். அய்யம்பாளையம் கிராமத்தில் ராஜவாய்க்காலில் அய்யம்பாளையம் தலைப்பு மதகின் மேல்புறம் மற்றும் கீழ்புறம் கான்கிரீட் சுவர் அமைத்து பலப்படுத்தப்பட்டுள்ளதை பாசனதாரர் சங்கத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ளும் விவசாயிகளை பாராட்டினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai