சுடச்சுட

  

  ஜேடர்பாளையம் படுகை அணை, ராஜாவாய்க்காலில் பொதுமக்கள் குளிக்கத் தடை

  By DIN  |   Published on : 13th September 2019 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் ராஜாவாய்க்காலில் பொதுமக்கள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
   மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் அதிகளவில் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில் பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் படுகை அணைக்கு வியாழக்கிழமை 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏற்கெனவே 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த போது பொதுப்பணித் துறையினர் மற்றும் போலீஸார் படுகை அணைப் பகுதி காவிரி ஆறு மற்றும் ராஜா வாய்க்கால் பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கக் கூடாது என தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்திருந்தனர்.
   இந்த நிலையில் கடந்த 6 நாள்களுக்கு முன்பு நண்பர்களுடன் சுற்றுலா வந்த ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுவரை அவரது உடலை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரு தினங்களுக்கு முன்பு பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளித்த முதியவர் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மூன்று இளைஞர்களும் காவிரியில் அடித்துச் செல்லப்படனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முதியவர் உள்பட நான்கு பேர்களையும் உயிருடன் மீட்டனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையம் காவிரி ஆற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனால் தற்போது ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள அண்ணா பூங்காவுக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், படுகை அணை பகுதிக்குச் சுற்றுலா வரும் பொதுமக்கள் காவிரி ஆறு மற்றும் ராஜாவாய்க்காலில் குளிப்பதற்கு பொதுப்பணித் துறையினர் தடைவிதித்தும் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். காவிரிப் படுகை பகுதிகளில் போலீஸார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai