சுடச்சுட

  

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.61-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
   நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணயக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வெள்ளிக்கிழமைக்கான முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக, பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.
   இதில், முட்டை விற்பனை உயர்வு அடைந்து வருவதால் பண்ணைக் கொள்முதல் விலையை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலும் 3 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டை விலை ரூ.3.61-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
   இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.76-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai