நைனாமலை பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி உற்சவ பெருவிழா

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி உற்சவ பெருவிழா வரும் சனிக்கிழமை (செப்.14) தொடங்குகிறது.

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி உற்சவ பெருவிழா வரும் சனிக்கிழமை (செப்.14) தொடங்குகிறது.
 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் சாலையில், பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமை புரட்டாசி உற்சவ பெருவிழா தொடங்கி 5 வாரங்கள் வரை நடைபெறும். அதேபோல நிகழாண்டுக்கான உற்சவ பெருவிழா வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.
 விழாவில், பிற மாநிலங்களில் இருந்தும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வருவர். இந்த மலைக்கோயிலை தென் திருப்பதி என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com