பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவியருக்கு பாராட்டு

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி மாணவியருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி மாணவியருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
 நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர், நிகழாண்டு ஏப்ரல், மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகளில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் இறுதி ஆண்டு மாணவியர், பி.சி.ஏ. மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் பாடப் பிரிவுகளில், 100 சதவீதத் தேர்ச்சியும், பி.எஸ்சி கணிதம் 99, பி.எஸ்சி இயற்பியல் 98, எம்.ஏ. ஆங்கிலம் 97, பி.ஏ. ஆங்கிலம் 96, பி.எஸ்சி கணினி அறிவியல் 92, பிகாம்.சிஏ மற்றும் பி.எஸ்சி வேதியியல் 91, எம்.காம் 86, எம்.எஸ்சி கணிதம் 85 மற்றம் பி.காம் பாடப் பிரிவில் 82 சதவீதத் தேர்ச்சிப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
 பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே செங்கோடன், செயலர் கே. நல்லுசாமி, டிரினிடி அகாதெமித் தலைவர் ஆர். குழந்தைவேல், அதன் செயலர் டி. சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இயக்குநர் - கல்வி அரசு பரமேசுவரன், இயக்குநர் வேலைவாய்ப்பு கே. மனோகரன், நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், துறைத் தலைவர்கள் ஆர். தவமணி, கே. தங்கம்மாள், கே. வளர்மதி, ஜி. செல்வலட்சுமி, பி. சுமதி, என். தங்கமணி, டி.கே. அனுராதா, பெரியார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் ஆர். நவமணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவியர் அனைவரையும் வாழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com