Enable Javscript for better performance
ஆர்.புதுப்பாளையம் அரசுப் பள்ளியில் தொழிற்கல்வி ஆய்வகம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆர்.புதுப்பாளையம் அரசுப் பள்ளியில் தொழிற்கல்வி ஆய்வகம் தொடக்கம்

    By DIN  |   Published on : 14th September 2019 04:09 AM  |   அ+அ அ-   |    |  

    நாமக்கல் மாவட்டத்தில் முதலாவதாக, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.7 லட்சம் மதிப்பில் தொழிற் கல்வி ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ராசிபுரம் வட்டத்தில் உள்ள ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. தற்போது, இப் பள்ளியில் 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை, 1,600 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 
    சுற்றுச்சூழல்,  காணொலிக் காட்சி வகுப்பறை,  உயர்தொழில் நுட்ப ஆய்வகம் என சுமார் ரூ.15 லட்சத்தில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வியைத் தொடங்கும் பொருட்டு, தமிழக அரசு  மாவட்டத்துக்கு ஒரு பள்ளியைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி,  நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளியில், 9, 10 - ஆம் வகுப்பில் ஆண்டுக்கு 80 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழக்கமான பாடங்களுடன் தொழிற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காக 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
    மேலும், 9 - ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் இத்தொழிற் கல்வியைப் படித்து முடித்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அரசு தொழில் நிறுவனங்களில் முன்னோட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.  இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வியில் மட்டுமின்றி  தொழில்கள் பல கற்பதிலும் ஆர்வம் ஏற்படும். 
    இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலரும்(பொறுப்பு), ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான மு.ஆ.உதயக்குமார் கூறியது: அரசின் தொழிற் கல்வி ஆய்வகம்,  நாமக்கல் மாவட்டத்தில் ஆர்.புதுப்பாளையம் அரசுப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. 9 மற்றும் 10 - ஆம் வகுப்பு மாணவர்கள், தொழிற் கல்வி பயில விருப்பம் கொண்டவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து செல்லும்போது அரசு தொழில் நிறுவனத்திலோ,  தனியார்  தொழில் நிறுவனத்திலோ இங்கு வழங்கப்படும் சான்றிதழ்களை கொண்டு பணியில் சேர முடியும். அப்ரண்டீஸ்  பயிற்சி வழங்கவும் முன்னதாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வகையிலும் சிறப்பான பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ள இப்பள்ளி, தொழிற் கல்வியிலும் சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp