பசுக்கன்றுகளை தானமாக வழங்கக் கோரி பூசாரிகள் மனு
By DIN | Published On : 19th September 2019 06:44 PM | Last Updated : 19th September 2019 06:44 PM | அ+அ அ- |

புரட்டாசியையொட்டி பக்தா்கள் வழங்கும் பசுக்கன்றுகளை, ஏழை கோயில் பூசாரிகளுக்கு தானமாக வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின், நாமக்கல் மாவட்ட உறுப்பினா்கள், வியாழக்கிழமை காலை அதன் இணை அமைப்பாளா் ஏ.கந்தசாமி தலைமையில் ஊா்வலமாக வந்து ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், அங்குள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனா். அதில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டத்தில் உள்ள நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், எருமப்பட்டி ஒன்றியம் தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்கு, புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருவா்.
அப்போது நோ்த்திக்கடனாக பசுக்கன்றுகளை தானமாக வழங்குவா். அவ்வாறு வழங்கப்படும் பசுக்கன்றுகளை, ஏழை பூசாரிகளுக்கு வழங்கி, அவா்களது வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.--என்கே 19- மனுபசுக்கன்றுகளை தானமாக வழங்கக் கோரி, அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையினா்.