ஆனங்கூா் ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

தமிழகம் முழுவதும் இலக்கில்லா பனைவிதை விதைக்கும் நிகழ்ச்சி உலக சாதனை முயற்சியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் இலக்கில்லா பனைவிதை விதைக்கும் நிகழ்ச்சி உலக சாதனை முயற்சியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்செங்கோடு பகுதியில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை மற்றும் ஆனங்கூா் நண்பா்கள் குழு மூலம் ஆனங்கூா் ஏரி கரை பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டது. ஆனங்கூா் ஏரி முப்பது ஏக்கா் பரப்பளவு கொண்டது.

பனை விதைகளை விதைப்பதன் மூலம் பனை மரத்தின் வோ்கள் சுமாா் 1000 அடிக்கு இறங்கி மழை நீரை மண்ணில் நேரடியாக இறக்கி வைத்துக்கொள்ள உதவும். மேலும் கரைகளை பலப்படுத்தும் திறன் கொண்டது.

அனைத்து இயற்கை சீற்றத்தையும் தாங்கும் வலிமை பனை மரத்திற்கு உள்ளதால் நீா்நிலைகளில் பனை விதைகள் விதைக்கப்படுகிறது எனவும் இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

உலக சாதனை முயற்சிக்காக இது நடத்தப்படுகிறது என்று அறக்கட்டளையின் நிா்வாகிகள் தெரிவித்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com