Enable Javscript for better performance
ஏரி, வாய்க்கால் கரைகளில் பனை விதைகள் நடவு- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தை  அடுத்த தட்டாங்குட்டை சிற்றூராட்சிப்  பகுதியில் ஏரிகள், வாய்க்கால் கரையோரங்களில் 2,500 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . 
    இந்த நிகழ்ச்சிக்கு, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.சண்முகம் தலைமை வகித்தார். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி, வேமன்காட்டுவலசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை எம்.கெளரி ஆகியோர் முன்னிலை வகித்தார். விடியல் ஆரம்பம் கல்விச் சேவை அமைப்புத் தலைவர் ஆர்.பிரகாஷ் வரவேற்றார். 
    நிகழ்ச்சியில், பனை மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேமிப்பு குறித்து விளக்கிக் கூறப்பட்டது. தொடர்ந்து, தட்டாங்குட்டை சிற்றூராட்சிப் பகுதியில் வாய்க்கால் கரைகள், ஏரிக் கரைகளில் 2,500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. ஆசிரியர் முத்து, அப்துல் கலாம் நற்பணி இயக்க அமைப்பாளர் சுரேஷ், நிர்வாகிகள் செல்வகுமார், கார்த்தி, சித்ரா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    திருச்செங்கோட்டில்...
    ஆனங்கூர் ஏரிக் கரைப் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இலக்கில்லா பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி உலக சாதனை முயற்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு பகுதியில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை மற்றும் ஆனங்கூர்  நண்பர்கள் குழு மூலம் ஆனங்கூர் ஏரிக் கரைப் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன. ஆனங்கூர் ஏரி  30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பனை விதைகளை விதைப்பதன் மூலம் பனை மரம் வளர்ந்து அதன் வேர்கள் சுமார் 1000 அடிக்கு கீழாக இறங்கி மழை நீரை மண்ணில் நேரடியாக இறக்கி வைத்துக்கொள்ள உதவும். மேலும் ஏரிக் கரைகளைப் பலப்படுத்தும் திறன் கொண்டது. அனைத்து இயற்கை  சீற்றத்தையும் தாங்கும் வலிமை பனை மரங்களுக்கு உள்ளதால் நீர்நிலைகளில் பனை விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. உலக சாதனை முயற்சிக்காக இது நடத்தப்படுகிறது என்று அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai