கிராம சுகாதார செவிலியர் பணியிடம்:  முன்பதிவை சரிபார்க்க ஆட்சியர் அழைப்பு

காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் முலம்

காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் முலம் பட்டியல் தயார் செய்யப்படுவதால், முன்பதிவை சரிபார்க்க  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவப் பணியாளர்  தேர்வு வாரியத்தால், 1,234 கிராம சுகாதார செவிலியர் (பெண்கள் மட்டும்) காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு 2019 ஜூலை 1-ஆம் தேதியன்று 18-ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இதற்கான கல்வித் தகுதி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சியாகும். கல்வித் தகுதியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 18 மாத கால ~ஆன்சிலரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்டிபர்பஸ் ஹெல்த் ஒர்க்கர் (பெண்கள்)  சான்றிதழ் அல்லது 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இரண்டு வருட கால ~ஆன்சிலரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்டிபர்பஸ் ஹெல்த் ஒர்க்கர் (பெண்கள்) சான்றிதழுக்கான கல்வித் தகுதியை முடித்து, தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வொய்ப்ஸ் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியுடைய, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைவரும், வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது பதிவினை அங்கு சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com