தலை நிமிர்ந்து நடக்க தலை குனிந்து படியுங்கள்: நீதிபதி சுஜாதா

வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என விரும்பினால், தலை குனிந்து படியுங்கள் என நாமக்கல்

வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என விரும்பினால், தலை குனிந்து படியுங்கள் என நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி விழாவில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி டி.சுஜாதா தெரிவித்தார்.
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிரினிபெஸ்ட் - மாணவியர் கலைத்திறன் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் கே.நல்லுசாமி வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் எம்.ஆர்.லட்சுமிநாராயணன் வரவேற்றுப் பேசினார். இயக்குநர்-கல்வி அரசு பரமேசுவரன் சிறப்பு அழைப்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் டி. சுஜாதா கலந்து கொண்டார். அவர் பேசியது: இந்த உலகம் இளைஞர்களை அதிகம் சார்ந்திருக்கிறது. நீங்கள் படிக்கும் வயது. இப்போது தலை குனிந்து படித்தால் தான், நாளை நீங்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியும். செல்லிடப்பேசி என்றும் ஆபத்து தான்.  அதனைப் பொழுதுபோக்கிற்காக, தேவையில்லாத விஷயங்களுக்கு நீங்கள் பயன்படுத்தினால் சைபர் கிரைம் மூலம் உங்கள் செல்லிடப்பேசி விவரங்களை எளிதில் போலீஸாரால் பெற முடியும் என்றார்.  மேலும், பெண்களுக்கு ஆதரவாக உள்ள சட்டங்களான சொத்தில் சம உரிமை, விவாகரத்திற்கு பின் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது, பெண்களை கேலி வதை செய்பவர்களை போலீஸாரிடம் புகார் அளிப்பது, குடும்ப வன்முறை, அமில வீச்சுத் தாக்குதல்  போன்றவை குறித்து அவர் மாணவிகளிடம் எடுத்துக் கூறினார். மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில் டிரினிடி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியருடன் அவர் மரக்கன்றுகளை நட்டார்.
இந்த நிகழ்வில் மாணவியரின் தனி நபர் நடனம், குழு நடனம், மோனோ நடிப்பு, ஒரு நிமிடப் போட்டி, சமையல், ஓவியம், கோலம், மருதாணி அலங்காரம், பூக்கள் அலங்காரம், மணப்பெண் அலங்காரம், தாள் மற்றும்  நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளில் இருந்து கலை உருவாக்கம் மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடுவர்களாக நாமக்கல் - இன்னர்வீல் மன்ற உறுப்பினர்கள் அருணா செல்வராஜ், உமா மோகன்,  சிந்தனா அருண், லதா ஆறுமுகம், லதா வெங்கடேஷ், சங்கீதா முருகன், வித்யா மணிகண்டன், அனு கார்த்தி,  அனுபமா நாகஹரீஷ், ஜனனி ஸ்ரீநாத் ஆகியோர் செயல்பட்டனர்.  இந்த நிகழ்ச்சிகளில்,  வேலைவாய்ப்பு இயக்குநர் கே. மனோகரன்,  நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார், கல்லூரி துறைத் தலைவர்கள் டி.கே.அனுராதா, ஆர். தவமணி,  கே.தங்கம்மாள், பி.சுமதி, என்.தங்கமணி, ஜி.செல்வலட்சுமி, கே.வளர்மதி, பெரியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினர் ஆர். நவமணி, என்எஸ்எஸ் இயக்குநர்கள் எம். சசிகலா, எஸ். ஜெயமதி, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர். சாவித்திரி, உடற்கல்வி இயக்குநர் ஏ.நித்யா மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com