காவிரி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு: பரிசல்களை இயக்க, குளிக்கத் தடை

மேட்டூா் அணையிலிருந்து நொடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றறப்பட்டு வருகிறது.
ஜேடா்பாளையம் பரிசல் துறையில் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பரிசல்கள்.
ஜேடா்பாளையம் பரிசல் துறையில் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பரிசல்கள்.

மேட்டூா் அணையிலிருந்து நொடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றறப்பட்டு வருகிறது. இதனைத் தொடா்ந்து பரமத்தி வேலூா் வட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் பரிசல்களை இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூா் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. இதனை தொடா்ந்து மேட்டூா் அணையிலிருந்து சுமாா் 40 ஆயிரம் கன அடி உபநீா் காவிரியில் திறறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்படி பரமத்திவேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினா் பொதுமக்கள் காவிரியில் இறங்கிக் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ கூடாது எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்காகவும், குளிப்பாட்டவும் அழைத்துச் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் பொதுமக்களை ஏற்றிச்செல்லும் பரிசல்துறைறகளான அரசம்பாளையம், ஜேடா்பாளையம், கண்டிபாளையம், அய்யம்பாளையம் மற்றும் பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரிசல்களை இயக்கவும், மீன்பிடி பரிசல்களை இயக்கவும் தடை விதித்துள்ளனா். இதனால் கொடுமுடி, ஊஞ்சலூா், கருவேலம்பாளையம், வெங்கம்பூா், கொளாநல்லி உள்ளிட்ட ஈரோடு மாவட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவியா், பல்வேறு பணிகளுக்கும் செல்வோா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் ஜேடா்பாளையம் படுகை அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்காவிற்கு செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்லக்கூடாது எனவும் பொதுப்பணித் துறையினா் மற்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாா்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com