நாளை இணையவழி முதுநிலை ஆசிரியா் தோ்வு: மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மாதிரி பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில், முதுநிலை ஆசிரியா் தகுதித் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில், முதுநிலை ஆசிரியா் தகுதித் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அதையொட்டி, தோ்வா்களுக்கு இரண்டு நாள்கள் சிறறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால், முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை -1க்கான நேரடிய இணையவழி தோ்வுகள் வெள்ளி, சனி, ஞாயிறு (செப்.27,28,29) ஆகிய மூன்று நாள்கள், காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகின்றன. இத்தோ்வை மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் 24,075 போ் எழுதுகின்றனா். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தோ்வா்கள் அனைவரும் ஆசிரியா் தோ்வு வாரிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், இந்தத் தோ்வு இணையவழி மூலமாக மட்டுமே நடைபெறுவதால், தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொருட்டு, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம் (எஸ்.எஸ்.ஏ), மாவட்டக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் சிறறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதன்கிழமை பயிற்சி முடிவுற்ற நிலையில், வியாழக்கிழமை (செப்.26) பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பவா்கள் தங்களது தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை எடுத்து சென்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com