பால் உற்பத்தியாளா்கள் இன்று ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கறறவை மாடுகளுடன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கறறவை மாடுகளுடன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், வியாழக்கிழமை (செப்.26) பிற்பகல் 5 மணிக்கு, எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம்புதூரிலும், 27-ஆம் தேதி செவிந்திப்பட்டியிலும், 28-ஆம் தேதி முத்துக்காப்பட்டியிலும் பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

இதில், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஆண்டுதோறும் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை சோ்க்க வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை எருமப்பட்டி ஒன்றிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com