Enable Javscript for better performance
திறனாய்வுப் போட்டி: நாமக்கல் மோப்ப நாய் சீமாவுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திறனாய்வுப் போட்டி: நாமக்கல் மோப்ப நாய் சீமாவுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 29th September 2019 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தமிழக காவல் துறை சார்பில், 63-ஆவது மாநில அளவிலான பணி திறனாய்வுப் போட்டி கடந்த ஒரு வாரமாக சென்னை ஆவடியில் நடைபெற்றது.
    இதில், துப்பறியும் மோப்ப நாய்களுக்கான குற்றச்சம்பவங்களைக் கண்டுபிடிக்கும் பிரிவில், நாமக்கல் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் சீமா கலந்துகொண்டு, தமிழக அளவில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது. இப்போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற மோப்ப நாய் சீமா மற்றும் அதன் பயிற்சியாளர்களான தலைமைக் காவலர் தண்டபாணி மற்றும் முதல்நிலைக் காவலர் துரைசாமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு சனிக்கிழமை பாராட்டினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai