Enable Javscript for better performance
வாக்காளர் அட்டையை சரிபார்க்கும் செயலி அறிமுக நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் அட்டையை சரிபார்க்கும் செயலி அறிமுக நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 29th September 2019 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் சரிபார்க்கும் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது? என்பது குறித்து திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேல் தலைமையில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
    கூட்டத்தில், செயலியை எவ்வாறு பயன்படுத்துவது? என்பது குறித்து பட விளக்கங்களுடன் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தற்போது தங்களது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்துக் கொள்ள மட்டுமே வழிவகை உள்ளது. வரும் காலங்களில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் போன்ற பல்வேறு பணிகளை இந்தச் செயலி மூலம் செயல்படுத்த முடியும் என எடுத்துக் கூறப்பட்டது. 
    நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், வருவாய்த் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai