உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் சனிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.


உலக இதய தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் சனிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் கிளை மற்றும் நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்கம், சேலம் மணிபால் மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தொற்றாநோய் துறை ஆகியவை சார்பில், உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநர் (பொ)மருத்துவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்கத் தலைவர் பெ.ரங்கநாதன், நாமக்கல் இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி செயலர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இப்பேரணியானது, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி மோகனூர் சாலை, சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக நாமக்கல் பயணியர் மாளிகையில் நிறைவடைந்தது. இதயம் காப்போம் வாருங்கள் என்ற முழக்கத்துடன் தொடங்கிய பேரணியில், தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். யோகா, தியானம், நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, மது மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்தாமை, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை, மாற்றுத்திறன் மூலம் இதய நோயிலிருந்து காத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினர்.
முன்னதாக பேசிய நாமக்கல் இதய நோய் நிபுணர் ராஜா, ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 17 மில்லியன் மக்கள் இதய நோயால் உயிரிழக்கின்றனர். எய்ட்ஸ், மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோயினால் ஏற்படும் இறப்பை விட, இதய நோய் பாதிப்பால் ஏற்படும் இறப்புகள் அதிகம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை தங்களுடைய உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com