கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரி மன்னன் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆக. 2, 3 தேதிகளில் இங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும்
கொல்லிமலைக்கு வருவர்.
இந்நிலையில், தருமபுரியில் அதியமானுக்கு எவ்வாறு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் கொல்லிமலையிலோ அல்லது அடிவாரப் பகுதியான காரவள்ளியிலோ, வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சேந்தமங்கலம் வல்வில் ஓரி அறக்கட்டளை சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஓரி மன்னன் சிலையை புனரமைத்து, அப்பகுதியில் பூங்கா ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக விரைவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என வல்வில் ஓரி அறக்கட்டளையின் புரவலர் பி.நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் துத்திக்குளம் பாலு, எம்.கந்தசாமி, ஆர்.கே.மணி, அன்பரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com