சாலைப் பாதுகாப்பு:வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: நாமக்கல் எஸ்.பி. அர.அருளரசு

சாலைப் பாதுகாப்பு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காவல் துறையுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அர.அருளரசு


சாலைப் பாதுகாப்பு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காவல் துறையுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அர.அருளரசு கேட்டுக் கொண்டார்.
ராசிபுரம் போக்குவரத்துக் காவல் பிரிவு, சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம், ஜேசிஐ மெட்ரோ அமைப்பு போன்றவை இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகனப் பேரணியை சனிக்
கிழமை நடத்தியது.
இதில் ராசிபுரம் டிஎஸ்பி ஆர்.விஜயராகவன் முன்னிலை வகித்தார். ராசிபுரம் ஆண்டகளூர்கேட் அரசுக் கல்லூரி முன் தொடங்கிய பேரணியை நாமக்கல் எஸ்.பி. அர.அருளரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
முன்னதாக தொடக்க விழாவில் அர.அருளரசு பேசியது: விலை மதிப்பற்ற உயிரை சாலை விபத்துகளில் சிந்தாமல் இருப்பதற்காக விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படுகிறது. சாலை விபத்தில் ஒரு குடும்பத் தலைவர் அடிபட்டு உயிரிழந்தால், அந்த குடும்பம் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது. இதே போல் அந்த குடும்ப வாரிசு உயிரிழந்தால், அந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது.
இது போன்ற இழப்பு அந்த குடும்பத்துக்கு மட்டுமல்ல. இந்தியாவின் பொருளாதார சூழ்நிலையும் அதில் அடங்கியுள்ளது. விபத்தினால் எல்லாவகையான பொருளாதார இழப்புகளும், நாட்டின் வளமும் பாதிக்கும். எனவே, விபத்துகளே இல்லாத நாள், விபத்துகளே இல்லாத மாதம், விபத்தே இல்லாத ஆண்டு இருக்க வேண்டும் என்பது தான் நம் இலக்கு. அந்த வகையில் சாலை விதிகளை பள்ளிக் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர், தொண்டு நிறுவனத்தினர் இணைந்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் பேரணியில், ஜேசிஐ மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவா செங்கோட்டுவேலு, மண்டல இயக்குநர் ஆர்.மகேந்திரன், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு மைய வழக்குரைஞர் பிரிவு செயலர் சி.சிலம்பரசன், நகர நிர்வாகி சந்துரு, நகர அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பாலாஜி, ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.திருமூர்த்தி,  வனிதா கிளப் தலைவர் கே.நதியா, ஜேசிஐ தலைவர் பூபதி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com