நரசிம்மர் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்

நாமக்கல் நரசிம்மர் கோயிலில், நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.


நாமக்கல் நரசிம்மர் கோயிலில், நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள குடவறைக் கோயிலான நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலில், நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்கி அக். 9-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
ஒவ்வோர் நாளும் காலை 8 மணியளவில் அரங்கநாயகி தாயார் பேட்டை திருவீதி புறப்பாடும், காலை 9 மணிக்கு நாமகிரி தாயார் கோட்டை திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. மேலும், இரவு 7 மணிக்கு நரசிம்மர் சுவாமி ஒவ்வோர் அவதாரத்தில்  தாயார் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு சுவாமி கொலுமண்டபத்தில் எழுந்தருளியபின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் பெ.ரமேஷ், தக்கார் வே.குமரேசன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்துள்ளனர். 
செல்லப்பம்பட்டி: புதன்சந்தை அருகே செல்லப்பம்பட்டியில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில், எட்டாம் ஆண்டு நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி
அக். 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
நவராத்திரியின் ஒன்பது நாள்களும், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மகா மாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினரும், பொதுமக்களும் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com