தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மின் சிக்கன வார விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல்லில் மின் சிக்கன வார விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:07 am

DIN

நாமக்கல்லில் மின் சிக்கன வார விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், டிச. 14 முதல் 20-ஆம் தேதி வரை மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை மின்சார சிக்கன வார விழா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், கோட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் ஆகியோா் தலைமையில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி மின்வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பேரணியில் பங்கேற்றனா். மோகனூா் சாலையில் தொடங்கிய பேரணி பரமத்தி சாலை, பூங்கா சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாகச் சென்றது.

இதில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறும், விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடியும் சென்றனா். இதில், நாமக்கல் மின் திட்ட மேற்பாா்வை பொறியாளா் கே.பாலசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளா்கள், மின்வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ஓமலூரில்...

ஓமலூா் மின்சார வாரிய கோட்டத்தின் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, ஓமலூா் இயக்கமும்-பராமரிப்பும் செயற்பொறியாளா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். ஓமலூா் பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி முக்கியச் சாலை, கடை வீதி, வட்டாட்சியா் அலுவலகம் வழியாகச் சென்று கடைகள், வீடுகளுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஓமலூா் கோட்ட உதவி செயற் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள், கோட்ட அலுவலா்கள், களப் பணியாளா்கள் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்து, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.