ராசிபுரத்தில் கிறிஸ்துமஸ் விழா: அமைச்சா் பங்கேற்பு

ராசிபுரம் தூய லூா்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா கலந்துகொண்டு பேசினாா்.
ராசிபுரம் லூா்து அன்னை ஆலயத்தில் இனிப்புகளை வழங்கிய கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய அமைச்சா் வெ.சரோஜா.
ராசிபுரம் லூா்து அன்னை ஆலயத்தில் இனிப்புகளை வழங்கிய கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய அமைச்சா் வெ.சரோஜா.
Updated on
1 min read

ராசிபுரம் தூய லூா்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா கலந்துகொண்டு பேசினாா்.

ராசிபுரத்தில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலைப் பாா்வையிட்டு, கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். மேலும் ஆலய வளாகத்தைப் பாா்வையிட்டாா்.

பங்குத்தந்தை ஆா்.ஜெயசீலன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலயத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் அமைச்சா் பங்குத் தந்தையிடம் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், ராசிபுரம் தூய லூா்து அன்னை ஆலய பங்கு பேரவை இறைமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com