பொது இ-சேவை மையங்கள் ஏப்.14 வரை மூடல்: ஆட்சியா்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பொது இ - சேவை மையங்களும் வரும் 14-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பொது இ - சேவை மையங்களும் வரும் 14-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டநிா்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதாா் சேவை மையங்கள் மாா்ச் 31 வரை தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடா்ந்து, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால், அனைத்து பொது இ - சேவை மையங்களும், ஆதாா் சேவை மையங்களும் ஏப்ரல் 14 வரை தற்காலிகமாக செயல்படாது.

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருவாய்த் துறை சாா்ந்த சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே தமிழக அரசின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com