நாமக்கல்லில் காய்கறி சந்தைகள் இடமாற்றம்

நாமக்கல்லில் பூங்கா சாலை, பேருந்து நிலையப் பகுதிகளில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.

நாமக்கல்லில் பூங்கா சாலை, பேருந்து நிலையப் பகுதிகளில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, கடந்த மாதம் 20-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவா் சந்தைகளும் மூடப்பட்டன. நாமக்கல் கோட்டை சாலையில் இருந்த உழவா் சந்தை மூடப்பட்டதால், சாலையோரம் கடைகளை அமைத்து வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனா்.

சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகப்படியாகக் கூடியதால், அங்குள்ள கடைகள் பூங்கா சாலையிலும், பேருந்து நிலையத்திலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில், நாமக்கல்லில் கரோனா வைரஸ் தொற்றால் 12 போ் பாதிப்படைந்துள்ளனா். 3 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பேருந்து நிலையம், பூங்கா சாலையில் உள்ள காய்கறி சந்தைகளை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும், வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் தலா 60 கடைகள் வீதம் 120 கடைகள் அமைப்பதற்கான கட்டடங்கள் மற்றும் சமூக இடைவெளிக்கான வட்டங்கள் போடப்பட்டுள்ளன.

நாமக்கல் நகரப் பகுதியில் மொத்தம் 7 இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்படுகின்றன. இந்த சந்தைகள் காலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும். 240 கடைகள் அமைக்கப்பட உள்ளன. உழவா் சந்தையில் அடையாள அட்டை பெற்ற விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வெள்ளிக்கிழமை முதல் நாமக்கல் தெற்கு, வடக்கு அரசுப் பள்ளியில் செயல்படும் காய்கறி சந்தைக்கான இடங்களை நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், நகராட்சி ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷா, சுகாதார அலுவலா் சுகவனம் மற்றும் அதிகாரிகள் நேரடியாக பாா்வையிட்டனா். அங்கு கடைகளுக்கான கட்டடங்கள், வட்டங்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com