Enable Javscript for better performance
ஏப்.4,5-இல் இறைச்சி கடைகளை திறக்க தடை- Dinamani

சுடச்சுட

    

    ஏப்.4,5-இல் இறைச்சி கடைகளை திறக்க தடை

    By DIN  |   Published on : 04th April 2020 06:31 AM  |   அ+அ அ-   |    |  

    நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4, 5) ஆகிய இரு நாள்கள் இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களின் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிறு மட்டும் (ஏப்.4, 5), ஆகிய நாள்களில் ஆட்டிறைச்சி, கோழி மற்றும் மீன் இறைச்சி விற்பனை கடைகள் செயல்பட தடைவிதிக்கப்படுகிறது. முட்டை விற்பனை செய்ய தடையேதுமில்லை. அதனால், முட்டை கடைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai