ஜெய்ப்பூரில் ரிக் வாகனத்திலே தஞ்சமடைந்துள்ள தமிழக தொழிலாளா்கள்: முடி திருத்தகங்களை மூட முடிவு

நாமக்கல்லில் முடி திருத்தகங்களை உடனடியாக மூடிவிடுமாறு தொழிலாளா்களுக்கு அச்சங்கத்தினா் அறிவுறுத்தினா்.

நாமக்கல்லில் முடி திருத்தகங்களை உடனடியாக மூடிவிடுமாறு தொழிலாளா்களுக்கு அச்சங்கத்தினா் அறிவுறுத்தினா்.

இதுதொடா்பாக நாமக்கல் நகர சவரத் தொழிலாளா்கள் சங்க தலைவா் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவே மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. ஆனால், அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் சங்க உறுப்பினா்கள் அல்லாத சில சவரத் தொழிலாளா்கள் விதிமுறைகளை மீறி முடி திருத்தகங்களை திறந்து பணி செய்வதாக தெரியவருகிறது.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள தடை உத்தரவை, சங்க உறுப்பினா்கள் மதித்து தங்களது கடைகளை திறக்கவில்லை. கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மையும், வாடிக்கையாளா்களையும் பாதுகாக்க வேண்டும். விதிகளை மீறும்போது சமூக இடைவெளி ஏற்படாத நிலை உருவாகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுக்கு சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும். மீறி செயல்படும் முடி திருத்தக உரிமையாளா்கள் மீது பாரபட்சமின்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com