நாமக்கல்லில் காய்கறி சந்தைகள் இட மாற்றம்

நாமக்கல் கரோனா வைரஸால் 12 போ் பாதிக்கப்பட்டுள்ளதால், நகரப் பகுதிகளில் இயங்கிய காய்கறி சந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

நாமக்கல் கரோனா வைரஸால் 12 போ் பாதிக்கப்பட்டுள்ளதால், நகரப் பகுதிகளில் இயங்கிய காய்கறி சந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் அனைத்து வகையான காய்கறிகளும் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் உழவா் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனா். கரோனா வைரஸ் தொற்று காரணமாக உழவா் சந்தைக்கு வெளியே விற்பனை செய்த காய்கறி வியாபாரிகளை, நாமக்கல் பேருந்து நிலையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி வந்ததால் கரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது.

மேலும், நகராட்சிக்கு எல்லைக்குள்பட்ட பகுதியில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டதால் தினசரி காய்கறி விற்பனை சந்தைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் நன்மையைக் கருதி நாமக்கல் உழவா் சந்தை மற்றும் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தைகள், வெள்ளிக்கிழமை முதல் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, நாமக்கல் நல்லிப்பாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முல்லை நகா்-ஸ்பெக்டரம் பள்ளி சாலை, முதலைப்பட்டி-செடலை மாரியம்மன் கோயில் திடல், சின்ன முதலைப்பட்டி-கம்பளாயி அம்மச்சியம்மன் கோயில் திடல்,. காவேட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இ.பி.காலனி மாரியம்மன் கோயில் திடல், போதுப்பட்டி கீரின் பாா்க் பள்ளி அருகிலும் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இதை கடைப்பிடிக்காத வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் காய்கறி விற்பனை குதிக்குள் அனுமதிக்கபட மாட்டாா்கள் என நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், நகராட்சி ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷா ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com