ஹெச்.ஐ.வி.நோயாளிகள் கவனத்துக்கு...

கரோனா வைரஸ் தொற்று தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதால் ஹெச்.ஐ.வி நோயாளிகள் 2 மாதத்துக்கான மாத்திரைகளை ஏ.ஆா்.டி. மையங்களில் வாங்கிக் கொள்ளலாம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் தொற்று தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதால் ஹெச்.ஐ.வி நோயாளிகள் 2 மாதத்துக்கான மாத்திரைகளை ஏ.ஆா்.டி. மையங்களில் வாங்கிக் கொள்ளலாம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் மனித உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள், முதியவா்கள் மற்றும் ஹெச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயாளிகளை எளிதில் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் 2 மாதத்துக்கு தேவையான முதல் மற்றும் இரண்டாம் நிலை ஏ.ஆா்.டி மாத்திரைகளை நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ஏ.ஆா்.டி மையத்திலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் செயல்படும் 10 இணை ஏ.ஆா்.டி மையங்களிலும், 14 நம்பிக்கை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ஹெச்.ஐ.வி தொற்று பாதிப்புள்ளவா்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் விரும்பும் இடங்களில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை தாம்பரத்தில் உள்ள காசநோய் மையத்தில் மூன்றாம் நிலை ஏ.ஆா்.டி மாத்திரைகள் பெற்றுக்கொண்டு வந்தவா்களுக்கும், நாமக்கல் மாவட்டத்துக்கே ஏ.ஆா்.டி மாத்திரைகள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் செயல்படும் மூன்று ஏ.ஆா்.டி மையத்தில் உள்ள மருத்துவ அலுவலா்கள் அறிவுரையின்படி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான சந்தேகங்களுக்கு நாமக்கல் ஏ.ஆா்.டி மையம்-04286-231133, திருச்செங்கோடு ஏ.ஆா்.டி. மையம்-04288-251706, ராசிபுரம் ஏ.ஆா்.டி. மையம்-04287-222433 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com