கிராம கோயில் பூசாரிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை
By DIN | Published On : 17th April 2020 06:55 AM | Last Updated : 17th April 2020 06:55 AM | அ+அ அ- |

கிராம கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினா்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என அறநிலையத் துறை உதவி ஆணையா் கோ.தமிழரசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினா்களாக இருப்போருக்கு, கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும். இத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் தங்களது பெயா், முகவரி, பணிபுரியும் கோயில், செல்லிடப்பேசி எண், பழைய, புதிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட சரக ஆய்வா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். நேரடியாக அலுவலகத்துக்கு வராமல் கட்செவி அஞ்சல்(வாட்ஸ் அப்) அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். குறைபாடுகளுடன் வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு ஆய்வா் சரகம், நாமக்கல்-99657-73836, ராசிபுரம்-98946-12557, திருச்செங்கோடு-98434-90521, பரமத்திவேலுா்-94866-89499 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.